அந்நிய நேரடி முதலீட்டில் சாதனை படைக்கும் இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம்
நம்பிக்கை மற்றும் ஆன்மீகம் முதல் சுற்றுலா வரை, விவசாயம் முதல் கல்வி மற்றும் திறன் மேம்பாடு வரை, மத்தியப் பிரதேசம் ஒரு அற்புதமான இடமாகும்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிச் செய்தி மூலம் உரையாற்றினார். இந்த உச்சிமாநாடு மத்திய பிரதேசத்தில் உள்ள பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்தும். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அனைத்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை அன்புடன் வரவேற்று, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் மத்தியப் பிரதேசத்தின் பங்கை எடுத்துரைத்தார். நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தில் இருந்து சுற்றுலா வரை, விவசாயம் முதல் கல்வி மற்றும் திறன் மேம்பாடு வரை, மத்தியப் பிரதேசம் ஒரு அற்புதமான இடமாகும் என்றார்.
இந்தியாவின் அமிர்த காலத்தின் பொற்காலம் தொடங்கியிருக்கும் தருணத்தில் இந்த உச்சிமாநாடு நடைபெறுவதாகவும், வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். வளர்ந்த இந்தியாவைப் பற்றி நாம் பேசும்போது, அது நமது அபிலாஷை மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனின் உறுதியும் ஆகும். உலகில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் நிபுணர்களும் இந்தியர்கள் மீது காட்டும் நம்பிக்கைக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார்.
உலகளாவிய அமைப்புகளால் காட்டப்படும் நம்பிக்கையின் உதாரணங்களைத் தந்த பிரதமர், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாகப் பார்க்கும் ஐஎம்எஃப் மற்றும் பலவற்றைக் காட்டிலும் இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்தது.
Input & Image courtesy: Maalaimalar News