ஆட்சியர் முன்னர் அதிகப்பிரசங்கித்தனமாக நல்லாசிரியர் விருது வழங்கிய திமுக மாவட்ட செயலாளர் !

Breaking News.

Update: 2021-09-10 07:45 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு விருது வழங்கும் விழாவில் திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் விருது வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகி ஒருவர் விருது வழங்கியது திமுகவினர் அரசு நிர்வாகத்தை கேள்விக்குள்ளாக்குவது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளரும் பங்கேற்றார். அரசு வழங்கும் விருதான இந்த நல்லாசிரியர் விருதை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லது அரசு அதிகாரிகள் வழங்குவது வழக்கம்.


ஆனா நாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் சட்டசபை உறுப்பினர் அல்லாத மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதி என்ற அதிகாரம் கூட இல்லாத திமுக மாவட்ட செயலாளர் அரசு அதிகாரிகளை மட்டம் தட்டி அரசு விருதை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற தங்க தமிழ்ச்செல்வன் அரசு பிரதிநிதி போல் செயல்பட்டு அரசு அதிகாரிகளை தனது அலுவலகத்திற்கு வரச்செய்து ஆய்வு கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


இதே போன்று திருச்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மாவட்ட ஆட்சியரை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கலந்துரையாடல் செய்த நிகழ்வும் நடந்தது. இத்தகைய நிகழ்வுகள் திமுக அரசியல் அமைப்பு சட்டத்துக்கு அது அளிக்கும் அதிகாரத்துக்கு உரிய மதிப்பு வழங்குவதில்லை என்றும் அரசியலமைப்பை கேலிக்குரியதாக்குவது போலவே திமுகவினரின் செயல்கள் அமைந்துள்ளன என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.


இத்தகைய செயல்கள் அருவருப்பை தருவதாகவும் பத்தாண்டுகளாக பதவியேற்று இருந்தவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் அர்த்த ராத்திரியிலும் அதை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அலைகிறார்கள் என்றும் அதிமுக நாளேடு 'நமது அம்மா' விமர்சித்துள்ளது.

Source: Tamil Samayam

Tags:    

Similar News