சாலை அமைத்ததாக கலெக்டருக்கு டிமிக்கி கொடுத்த அதிகாரி!

சாலை அமைப்பதாக கூறிசாலை அமைப்பதாக கூறி கலெக்டர் அவர்களிடமே, டிமிக்கி கொடுத்த அதிகாரி.

Update: 2022-08-25 12:57 GMT

 சாலை அமைப்பதாக கூறி பொதுமக்களிடம் அளித்த புகாரில் தார் சாலை அமைக்கப்பட்டதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு பதிலளித்து, புழல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏமாற்றியுள்ளார். சென்னை புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் பிரியா நகர் என்று நகர் உள்ளது. மேலும் இந்த நகர் பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மனைப்பிரிவில் அங்கீகாரம் பெற்று, மதியழகன் உட்பட நான்கு குடும்பங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள்.


இதில் வசித்து வரும் மதியழகன் கூறுகையில், மழைக்காலத்தில் தங்கள் வசிக்கும் பகுதிகளில் இரண்டு அடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கி விடுகிறது. வீட்டிற்கு செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. குளம்போல தேங்கி தண்ணீரில் காரணமாக, போக்குவரத்து வசதியின்றி வீட்டிலேயே முடங்கி இருக்கிறோம். எங்கள் பகுதிக்கு சாலை வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஊராட்சி அலுவலர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் என பல அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளோம்.


இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் அவர்களுக்கு மேற்கண்ட புகார் தொடர்பாக பதில் அளிக்கப்பட்டது. அந்த புகார் பதில் மனுவில் மனுதாரரின் வீடு அமைந்துள்ள பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அந்த பகுதியில் குறிப்பிட்ட மண் சாலை கூட அமைக்காமல், தார்சாலை அமைத்துள்ளதாக கலெக்டரிடம் அதிகாரிகள் பொய் கூறி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News