நெல்லை: ஆற்று மணல் கடத்தல் வழக்கில் கிறிஸ்துவர் உடன் தி.மு.க பின்னணியில் உள்ளதா?

நெல்லையில் ஆற்று மணலை கடத்திய குற்றத்திற்காக தி.மு.க ஊராட்சி ஒன்றிய தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-03-13 01:58 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த 300 ஏக்கர் நிலம், கேரள மாநிலத்தில் உள்ள டயோசீசனுக்கு சொந்தமானது. மேலும் அவர் தன்னுடைய நிலத்தை இங்குள்ள நபர்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு விரும்பியுள்ளார். இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு மனுவல் ஜார்ஜ் என்பவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. மேலும் குத்தகை நிலங்களுக்கு அருகில் ஆற்றுமணல் எம் ஸ்டாண்ட் எடுக்கும் பணியும் நடைபெற்று வந்தது. இதனைப் பயன்படுத்திய மனுவில் ஜார்ஜ் என்பவர் ஆற்று மணலை அதிகமாக கொள்ளையடிப்பதும் புகார்கள் எழுந்தன. 


இதனைத் தொடர்ந்து சேரன்மகாதேவி சார்ஆட்சியர் பிரதீப் தயாள் என்பவர் இது குற்றத்திற்காக ஜார்ஜ் என்பவர்க்கு ரூ.9.50கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார். மனுவல் ஜார்ஜ் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் இவ்வழக்கு CBCID விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவ டயோசீசன் பிஷப் சாமுவேல் மார் ஏரேனியஸ், ஷாஜி தாமஸ், பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஜோஸ் ஆகியோரை பேரையும் CBCID போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர்.


பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் சேரன்மகாதேவி அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரை, CBCID போலீஸார் நேற்று கைது செய்தனர். ஏனெனில் ஆற்று மணல் கொள்ளை வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக குமார் பொறுப்பு வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பூங்கோதை சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகிக்கிறார். எனவே இவர்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார் என்பது தொடர்பான நோக்கில் தற்போது வழக்கு திசை திருப்பப் பட்டுள்ளது. 

Input & Image courtesy:Hindu tamil

Tags:    

Similar News