விற்பனைக்கு வைத்திருந்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து காவல் துறையினர் அராஜகம் !

Breaking News.

Update: 2021-09-10 08:10 GMT

கொரானா சூழலை காரணம் காட்டி தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் சிறைவைத்து வழிபடுவதற்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் சாலையில் விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர் ஒருவர் தான் செய்த விநாயகர் சிலைகளை சாலையோரம் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வழியாக ரோந்து சென்ற காவல் துறையினர் சிலைகளை திடீரென்று பறிமுதல் செய்து ஜீப்பில் ஏற்றியுள்ளனர்.

இதைக்கண்டு சுற்றியிருந்தவர்கள் பொது இடத்தில் சிலை வைக்க தானே தடை. விற்பனைக்கு வைத்திருப்பது ஏன் பறிமுதல் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு மழுப்பலாக பதிலளித்த காவல்துறையினர் சிலைகளை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்வதாகவும் அங்கு வந்து காவல் ஆய்வாளரிடம் கேட்டுக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.

அங்கு கூடியிருந்த பலரும் இந்த நிகழ்வை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பலரும் காவல் துறையினரை விமர்சித்து வந்தனர். இன்னிலையில் சிலைகளை அளவு பார்ப்பதற்காக எடுத்து வந்ததாகவும், அவை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு கோவையில் 3 ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்ட ரத யாத்திரையின் விளைவாகவே விநாயகர் சிலைகளின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும், எந்த இடத்தில் வைக்கலாம், வைக்கக்கூடாது, எந்த வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லலாம் அல்லது கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று கிறிஸ்தவ கல்லூரி நிறுவனர் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது.

அவர் மேலும் இத்தகைய கட்டுப்பாடுகளால் "சிலை வழிபாடு" குறைந்துவிட்டது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்து விரோத மனப்பான்மை கொண்ட திமுக அரசு இந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இதற்கு மேலும் வழிவகை செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Source: Hindu Tamil

Tags:    

Similar News