உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்ட நாடு எது தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்ட நாட்டின் விவரம் பற்றி காண்போம்.;

Update: 2023-11-14 10:00 GMT

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்ட நாடு அமெரிக்கா. மொத்த ரயில் பாதையின் நீளம் சுமார் 2 லட்சத்து 93 ஆயிரத்து 500 கி.மீ  இது இரண்டாவது பெரிய நெட்வொர்க்கை கொண்டிருக்கும் சீனாவை விட இரண்டு மடங்கு நீளமானது. சீனாவில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு தான் ரயில் பாதை இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா ஐந்தாவது இடம்.


இதுவரை இந்தியாவில் சுமார் 68,500 கிலோமீட்டர் நீளத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் சுமார் 87 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் பாதைகள் அமைந்துள்ளன. நான்காவது இடம் பிடித்திருக்கும் கனடாவில் சுமார் 78 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் பாதைகள் உள்ளன.


SOURCE DAILY THANTHI

Similar News