உலகிலேயே மிகவும் அமைதியான இடம் எது தெரியுமா?
உலகிலேயே மிகவும் அமைதியான இடமாக வாஷிங்டன் நகரில் ஒரு இடம் உள்ளது.
அமைதியான இடத்தில் வாழ வேண்டும் என அனைவரும் சிந்திப்பதுண்டு. அப்படி ஒரு அமைதியான அறை அமெரிக்காவின் வாஷிங்டனின் ரெட்மாண்ட் வளாகத்தில் உள்ள மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் அமைந்துள்ளது. எவ்வளவு அமைதி என கேட்கிறீர்களா? இந்த அறைக்குள் உங்கள் ரத்த ஓட்டத்தை கூட கேட்கும் அளவுக்கு அமைதி நிலவுவதாக கூறப்படுகிறது . இந்த அறையில் ஒரு சிறிய ஒலி கூட கேட்கப்படுவதில்லை.
இதற்காக ஆறு திடமான சுவர்களுக்குள் கட்டப்பட்டுள்ள இந்த அறையின் ஒவ்வொரு சுவரும் ஒரு அடிவரை தடிமனாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறையின் ஒலியும் மைனஸ் 20.3 டெசிபில்களாக அளவிடப்பட்டுள்ளன. நீங்கள் இங்கே உட்கார்ந்து இருந்தால் உங்கள் இதயத்துடிப்பை கூட தெளிவாக கேட்கலாம். ஆனால் இந்த அறையில் 45 நிமிடங்களுக்கு மேல் யாரும் இருந்ததில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
SOURCE :DAILY THANTHI