அமிதாப் பச்சனின் பெயர், குரல் பயன்படுத்தி தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் படம், பெயர் மற்றும் குரலை பயன்படுத்துவதை உயர் நீதிமன்றம் தடை செய்து இருக்கிறது.

Update: 2022-11-27 06:08 GMT

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் படம், பெயர் மற்றும் குரல் ஆகியவற்றை அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது என்று புதுடெல்லி உயர் நீதிமன்றம் தற்போது அதிரடி தடையை விதித்து இருக்கிறது. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு தற்பொழுது 80 வயது ஆகிறது. இவர் பல்வேறு டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பிரபல விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் புதுடெல்லி உயர் நீதிமன்றத்தில் அமிதாப்பச்சன் சார்பில் தனது வழக்கறிஞர் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர படங்களில் நடத்த வருகிறார்.


ஆனால் ஒரு லாட்டரி நிறுவனம் அவரின் அனுமதியின்றி அவரது பெயர் மற்றும் குரலை பயன்படுத்தி விளம்பரம் செய்து இருக்கிறது. சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து மோசடி செய்து வருவதாகவும் அவர் வழக்கறிஞர் குறிப்பிட்டிருக்கிறார். எனவே அமிதாப் பச்சனின் பெயர், படம் மற்றும் அவரது குரலை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.


இவ்வாறு அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவினை விசாரித்த நீதிபதி நவீன் ஷாப் நடிகர் அமிதாப் பச்சன் அனுமதியின்றி அவருடைய பெயர்,படம் மற்றும் குரலை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து விசாரணையை அடுத்த மாதம் மார்ச் மாதத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தார். எனவே சட்டத்திற்கு புறம்பாக இதை செய்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News