இந்தியத் தொழில்நுட்பக் கூட்டுறவில் புதிய மைல்கல் - வெளியுறவுத்துறை அமைச்சர் பெருமிதம்!
இந்திய தொழில் நுட்ப கூட்டுறவில் மற்றொரு சாதனை படைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பெருமிதம்.
இஸ்ரோ ஆதரவுடன் பூட்டான் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ் செயற்கைக்கோளுடன் PSLV C-54 ராக்கெட் வெற்றிகரமான விண்ணில் பாய்ந்தது. இந்த தருணம் இரு நாடுகளின் விண்வெளி தொழில்நுட்ப கூட்டுறவின் ஒரு புதிய அம்சமாக பார்க்கப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார். சிறிய ரக செயற்கைக்கோளான INS ஒன்பது செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோ கட்டுப்பாட்டு மைய விஞ்ஞானிகளுக்கு இடையே காணொளி வாயிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அப்பொழுது விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து அவர் தன்னுடைய உரையை தொடங்கினார். 21 ஆம் நூற்றாண்டில் விண்வெளி தொழில்நுட்பத் துறையில் இந்தியா-பூடான் இடையிலான கூட்டுறவு புதிய சகாப்தத்திற்கு இடது செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த 2017ல் பூடான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான தனது பரிசாக தெற்காசிய செயற்கைக்கோளை இந்தியா செலுத்தியது. கடந்த 2019 தெற்காசிய செயற்கை கோள்களுக்கான தரை கட்டுப்பாட்டு நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இது இஸ்ரோ ஆதரவுடன் அமைக்கப் பட்டதாகும். தெற்காசிய நாடான பூடானின் சமூக பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதை அங்கீகரித்து இது சார்ந்த பூடானின் திறன் இணைந்து இந்திய தரவு விரிவான ஆதரவை வழங்கியது. இப்பொழுது இரு தரப்பும் ஒருங்கிணைந்து உருவாக்கிய பூடானுக்கான ஐ.என்.எக்ஸ் சிறிய ரக செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.