உலகளவில் ஆளுமை மிக்க பெண் தலைவராக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வு.!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவை சேர்ந்த இட முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் உலக அளவில் ஆளுமை மற்றும் மக்களுக்கு சேவையாற்றும் முன்னணி பெண் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2021-03-05 03:29 GMT
உலகளவில் ஆளுமை மிக்க பெண் தலைவராக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வு.!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவை சேர்ந்த இட முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் உலக அளவில் ஆளுமை மற்றும் மக்களுக்கு சேவையாற்றும் முன்னணி பெண் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.




 


இவர்களுக்கு வருகின்ற மார்ச் 7-ம் தேதி சிகாகோவில் உள்ள இலியானாஸ் நகரில் நடைபெறும் 9-வது ஆண்டு மகளிர் தினவிழாவில் அமெரிக்க எம்.பி. டேனி கே.டேவிஸ் காணொலி வாயிலாக விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.


 



இந்த விழாவில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஷ், இந்தியாவை சேர்ந்தவரும், புதுச்சேரி, தெலங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 20 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆப்பிரிக்கா, கனடா, ரஷியா போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.




 


கொரோனாவுக்கு பின் வருங்கால உலகத்தின் சீரமைப்பில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் இந்த வருடம் விருது வழங்கப்பட உள்ளது. முதல் விருது அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கும், 2-வது விருது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் வழங்கப்படுகிறது.




 


உலக அளவில் சிறந்து விளங்கக்கூடிய பெண்கள் தேர்வில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இடம் பிடித்துள்ளது அனைத்து இந்தியர்களுக்கும் மட்டுமின்றி தமிழர்களாகிய அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகவும் அமைந்துள்ளது.

Tags:    

Similar News