சென்னை: கடலோரப் பகுதிகளை கண்காணிக்க ட்ரோன் படை அறிமுகம்!

சென்னையில் விரைவில் கடலோர பகுதிகளை கண்காணிக்க ட்ரோன் படை தொடங்க இருப்பதாக அறிவிப்பு.

Update: 2022-12-17 04:15 GMT

சென்னையில் கடலோர பகுதிகளை கண்காணிக்க விரைவில் ட்ரோன் படை தொடங்கப்பட உள்ளது. சென்னையில் குற்றங்களை தடுக்க நவீன தொழில்நுட்பங்களை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். இப்பொழுது பெரும்பாலும் கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு வருகிறார்கள். இதற்காகவே சென்னையில் எல்லா சாலைகளிலும் காவல்துறை மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் முக்கிய கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு புறம் இருந்தாலும் ஆளில்லா குட்டி விமானங்கள் அதாவது ட்ரோன்கள் குற்றங்களை கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறது.


குறிப்பாக அதிக நேரத்தில் ரவுண்டில் செல்ல முடியாத இடங்களான கடலோரங்களை கண்காணிப்பதற்கு சிறப்பாக ட்ரோன் படை உருவாக்கப்படுகிறது. எலிகார்டு ஏரியில் இருந்தும் எண்ணூர், மெரினா, திருவான்மியூர், கானத்தூர் வரையிலான பகுதிகளை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மெரினா கடற்கரையில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி வரை கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். மேலும் வக்கிராம் கால்வாய் பகுதி வழியாக இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் முதற்கட்டமாக நீண்டதூரம் செல்லக்கூடிய ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஐந்து கிலோ எடை கொண்ட 15 சிறிய ரக ட்ரோன் உள்ளது. புதிதாக ஒப்படைக்கப்பட உள்ள ட்ரோன் 30 முதல் 40 கிலோ வரையிலான எடை கொண்டதாக இருக்கும். இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை மின்னோட்டம் செய்தால் போதும் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பறக்க முடியும். அந்த வகையில் ஐந்து முதல் 30 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று கண்காணிக்கும். இந்த ட்ரோன்களில் GPS கருவிகளும் நவீன கேமராக்களும் உண்டு. இந்த கேமராக்கள் மூலம் இரவில் தெளிவாகவும், பெரிதாகவும் படப்பிடிக்க முடியும் என்று கூறப்பட்டு இருக்கிறது. விரைவில் சென்னையில் ட்ரோன் படை தொடங்க இருப்பது குறிப்பிடத் தக்கது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News