துரைமுருகன் மகனுக்கு சீட்டா.. பாமகவுக்கு தாவிய திமுக நிர்வாகிகள்..!

துரைமுருகன் மகனுக்கு சீட்டா.. பாமகவுக்கு தாவிய திமுக நிர்வாகிகள்..!

Update: 2019-03-16 07:45 GMT

நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேலூர் தொகுதியில் களமிறங்குகிறது. அந்த தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.


அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்தை எதிர்த்து களமிறங்குகிறார். இதனால் வேலூரில் கடுமையான போட்டி நிலவுகிறது.


வேலூர் தொகுதியை பொறுத்த வரைக்கும் வன்னியர் வாக்குவங்கி அதிகமாகவே காணப்படுகிறது. இது திமுகவுக்கு பலமாக கருதப்படுகிறது.


பாமகவுக்கும் செல்வாக்கு உள்ளது தொகுதி. ஆனாலும் சாதி பலத்தால் துரைமுருகன் மகனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், திமுகவினரே அதற்கு ஆப்பு வைத்து உள்ளனர்.


வேலூரில் திமுகவின் முக்கிய பொருப்பாளரும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு கனிசமான வாக்குகளை பெற்றவருமான முன்னாள் சேர்மன் சிவூர் துரைசாமி விலகி தற்போது பாமகவில் இணைந்துள்ளார்.


மேலும், தேர்தல் நேரத்தில் அவரது முடிவு வேலூர் மாவட்டத்தில் பேரதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானதும் மேலும் பலர் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


திமுக நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுவது துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தின் வெற்றிக்கு மிகவும் பின்னடவை ஏற்படுத்தும்.


Similar News