'இ கிசான் உபஜ்' நிதி- விவசாயிகளுக்கான புதிய கடன் வசதி டிஜிட்டல் தளம்!
விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக 'இ கிசான் உபஜ் நிதி' என்ற டிஜிட்டல் தளத்தை மத்திய மந்திரி அறிமுகப்படுத்தியுள்ளார்.
விளைபொருள்களை அடகு வைத்து விவசாயிகள் கடன் பெற 'இ-கிசான் உபஜ் நிதி' என்ற எண்ம தளத்தை மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிமுகப்படுத்தினார். கிடங்குகள் மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று ஆணையத்தில் பதிவு செய்துள்ள கிடங்குகளில் தங்கள் விளைபொருட்களை சேமித்து வைக்கும் விவசாயிகள் இந்த தளம் வாயிலாக வங்கிகளில் கடன் பெற முடியும்.
தற்போது நாட்டில் சுமார் ஒரு லட்சம் வேளாண் கிடங்குகள் உள்ளன .டபிள்யூ ஆர்.டி .ஏ.வி.கே கீழ் 5500-க்கும் மேற்பட்ட கிடங்குகள் பதிவு செய்யும் நிலையில் இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்த தளத்தை அறிமுகப்படுத்தி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்ததாவது:-
விவசாயிகள் வருவாயை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய விவசாயத்தை நவீனப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எந்த பிணையமும் இல்லாமல் 7% வட்டி .வீதத்தில் விவசாயிகளால் எளிதில் கடன் பெற முடியும். அதே வேளையில் கிடங்குகளில் சேமிக்கும் தங்கள் விளைபொருள்களை விவசாயிகளால் விற்பனை செய்ய முடியும். அத்துடன் தங்கள் விளை பொருள்களை வேதனையுடன் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயமும் விவசாயிகளுக்கு இருக்காது. 'இ-கிசான் உபஜ் நிதி' தளத்தில் இணைக்கப்பட்டுள்ள வங்கிகள் கடன் தொகை மற்றும் வட்டி விகிதம் குறித்து விவசாயிகள் தேர்வு செய்வதற்கான வசதியை வழங்கும் என்றார்.
SOURCE :Dinamani