கிராமங்களில் இ-ஸ்மார்ட் கிளினிக் திட்டம் அறிமுகம்!
மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்துடன் இணைந்து லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் இ-ஸ்மார்ட் கிளினிக் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் மத்திய அரசின் 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்துடன் இணைந்து கிராமங்களில் மருத்துவ சேவையை பரவலாக்கும் இ-ஸ்மார்ட்கிளினிக் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டத்தை ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இ-ஸ்மார்ட் கிளினிக் திட்டம் தொடர்பாக லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் அபியான் இடையே கடந்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது .படிப்படியாக நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் இத்திட்ட அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இ-ஸ்மார்ட் கிளினிக் மூலம் கிராமப்புறங்களில் மருந்து சேவையை பரவலாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி கிராமங்களில் ரத்தப் பரிசோதனை உட்பட அடிப்படையான மருத்துவ பரிசோதனைகள் உடனடியாக மேற்கொள்ளவும் அது தொடர்பாக மருத்துவரை ஆலோசனையை பெறவும் வழி செய்யப்படும். இது குறித்து லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனோவ் டெலி தெரிவித்துள்ளதாவது:-
இந்திய கிராமங்களில் மருத்துவ சேவையை பரவலாக கொண்டு சேர்க்கும் நோக்கில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்த திட்டத்தை தொடங்குகிறோம் .அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமிக்க மருத்துவ சேவையை நோக்கிய நகர்வில் முக்கிய தருணம் இது என்று குறிப்பிட்டார். எல்லா கிராமங்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்றார்.
SOURCE :Kaalaimani. Com