பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்ட திருத்தம்!

பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்ட திருத்த மனு தள்ளுபடி.

Update: 2022-10-23 03:13 GMT

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் செல்லும் என்று அறிவிக்க கோரி சென்னையைச் சேர்ந்த உலக பிராமணர் நல அமைப்பின் தலைவர் கே. சிவ நாராயணம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் நீதிபதிகள லலித் மற்றும் எம். வேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.


மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பொருளாதாரத்தில் பின் தாங்கி முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் செல்லும் என கூறும் மனு அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட்டன் மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தேதி குறிப்பிடாமல் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தள்ளி வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News