முட்டை விலை வரலாறு காணாத வகையில் உயர்வு - பின்னணி என்ன?
முட்டை விலை தற்பொழுது வரலாறு காணாத வகையில் உயர்ந்து இருக்கிறது, தேவையும் அதிகரித்து உள்ளது.
சாதாரணமாக தமிழகத்திலிருந்து முட்டைகள் வெளிமாநிலங்களுக்கு தான் இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது நடைபெற்று முடிந்த உலக கோப்பை கால்பந்து திருவிழாவிற்காகவும், மேலும் சிங்கப்பூரில் ஏற்பட்ட முட்டை பற்றாக்குறையை தீர்க்கும் ஒரு முயற்சியாகவும் தமிழகத்தில் இருந்து நாமக்கல் மூலமாக முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
உள்ளூர் தேவையும் கருத்தில் கொண்டு மூட்டைகளின் எண்ணிக்கையை தற்பொழுது உற்பத்தியாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஆனால் தேவை அதிகரிப்பு காரணமாக தற்போது விளையும் உயர்ந்து இருக்கிறது. நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது.
இந்த கோழிகள் மூலமாக சுமார் 4 கோடிக்கு மதிப்பான முட்டைகள் தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக மற்றும் வெளி மாநிலங்களுக்கு,வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒரு நிலையில் தேவை அதிகரிப்பு காரணமாக முட்டைகளை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்து இருக்கிறது. அதன்படி முட்டை விலை ஐந்து காசுகள் உயர்ந்து 550 காசுகளுக்கு விற்கப்பட்ட முட்டைகளை 555 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy:Maalaimalar