பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரம் - ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்!

பிரதமர் மோடியை அபசகுனம் பிடித்தவர் என்று விமர்சித்தது தொடர்பாக ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் விடுத்துள்ளது.

Update: 2023-11-24 08:00 GMT

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நாளை நடக்கிறது. இதை ஒட்டி சமீபத்தில் அங்கு நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியாவின் தோற்றத்திற்கு பிரதமர் மோடியே காரணம் என்ற பொருளில் அவரை அபசகுனம் பிடித்தவர் என்று விமர்சனம் செய்தார்.


தொழிலதிபரான அதானி பிக் பாக்கெட் அடிக்கும்போது பிரதமர் மோடி மக்கள் கவனத்தை திசை திருப்புவார் என்றும் அவர் பேசியிருந்தார். பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் பா. ஜனதா சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இந்நிலையில் பா.ஜனதா புகாரின் பேரில் ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் பிரதமர் மோடிக்கு எதிரான பனாட்டி(அபசகுனம்) ,பிக் பாக்கெட் ஆகிய விமர்சனங்கள் குறித்து நாளை மாலைக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது .அரசியல் எதிரிகள் மீது உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை தெரிவிக்க தேர்தல் நடத்தை விதிமுறைகள் தடை விதிப்பதாக ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் சுட்டிக்காட்டி உள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News