தீப்பிடித்து எரியும் மின்சார வாகனங்கள் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறிய முக்கிய தகவல்
அதிகப்படியான வெயில் காரணமாக மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிவதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான வெயில் காரணமாக மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிவதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்து மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகப்படியான வெயில் காரணமாக மின்சார வாகனங்களில் பேட்டரிகளில் பிரச்சினைகள் ஏற்பட்ட தீ பிடித்து எரியும் சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார் மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனங்களுடன் விற்பனை செய்யப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களையும் தயாரிப்பு நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
மின்சார வாகன துறை தற்பொழுது தான் வளர்ச்சி பெற்று வருவதாகவும் அதற்குள் தீ விபத்து சம்பவத்தை காரணம் காட்டி முட்டுக்கட்டை போட அரசு விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். அதே சமயம் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் எனவும் குறிப்பிட்ட அவர் மனித உயிர் தொடர்பான விவகாரத்தில் சமரசம் கிடையாது எனவும் தெரிவித்தார்.