அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளிடம் கடனை வாங்கியுள்ளது. மறுபுறம் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகம் மிகப்பெரிய நிதி பற்றாக்குறையில் சிக்கியுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், தூதரகத்தில் 5 அமெரிக்கர்கள் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கவில்லையாம். இதனால் ஒரு ஊழியர் பணியில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தூதரக அதிகாரிகள் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு நிதி திருப்பி விடப்பட்டுள்ளதால் தூதரகம் நிதியை பராமரிக்க மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாகியுள்ளது எனக் கூறினர்.
Source: Daily Thanthi
Image Courtesy: Times Of India