பள்ளியில் பாலின சமத்துவத்தை அமல்படுத்துவது மதத்தை அவமரியாதை செய்யும் முயற்சி எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

மதத்தை அவமரியாதை செய்யும் முயற்சி எம்.எல்.ஏ சர்ச்சைக்குரிய பேச்சு.;

Update: 2022-08-08 01:10 GMT
பள்ளியில் பாலின சமத்துவத்தை அமல்படுத்துவது மதத்தை அவமரியாதை செய்யும் முயற்சி எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

பள்ளிகளில் இருபாலரின் சமத்துவத்தை கொண்டு வருவது மதத்தை அவமதிக்கும் செயல் என்று முஸ்லிம் லீக் கட்சியின் எம் எல் ஏ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளா அரசின் பாலினக் கொள்கை பெண் பாலினருக்கு எதிரான பாகுபாட்டை குறிப்பதாக முஸ்லிம் லீக் எம்எல்ஏ பேசியுள்ளார். கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பள்ளிகளின் பாலின 

 நடுநிலைக் கொள்கையை மேம்படுத்தும் வகையில் அம்மாநில இரு பாலினருக்கும் ஒரே சீருடையை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. அச்சீருடை கொள்கையை பல பள்ளிகளில் அமல்படுத்தியுள்ளனர். முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள இந்த சீருடை கொள்கைக்கு பல தரப்புகளில் இருந்து வரவேற்பு கிடைத்த நிலையில், கேரளாவில் உள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


 இந்த நிலையில் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அமைப்பான முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு சார்பில் கோழிக்கோட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அக்கட்சியின் எம்எல்ஏ எம்.கே.முனீர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பாலின நடுநிலை சீருடை என்ற பெயரில் மத மறுப்பை கொண்டுவர கேரள அரசு ஏற்கனவே திட்டம் தீட்டி விட்டது என்று பேசினார். மேலும் அவர் பேசியதாவது, "மாணவ மாணவியர்களின் சீருடை ஒரு மாதிரி இருப்பது மாணவர்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும். மாணவிகளுக்கு எதிரான பாகுபாட்டை கொண்டுவரும் செயல். 


மாணவிகளுக்கு சுடிதார் பொருத்தமாக இருக்காதா?" என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். "கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பயணத்தின் போது சேலை பிளவுஸ் ஏன் அணிந்து கொள்ளக்கூடாது? அவரது மனைவியை ஏன் பேண்ட் அணிய செல்லக்கூடாது?" என்று பேசியுள்ளார். பாலின சமத்துவத்தை அமல்படுத்தி பள்ளியில் மதத்தை அவமரியாதை செய்ய அரசு ஊக்குவித்து வருகிறது. கேரள அரசின் பாலின நடுநிலை நோக்கம் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுவதாக எம்எல்ஏ எம்.கே.முனீர் பேசியதை அடுத்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Thanthi

Tags:    

Similar News