தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம்: ஒரே மாதத்தில் 14.93 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு!
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் ஒரே மாதத்தில் 14.93 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 14.93 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 32,635 உறுப்பினர்கள் அதிகமாக இந்த ஆண்டு சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 14.93 லட்சமாக இருந்தது என்று தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 32,635 உறுப்பினர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டனர்.
14.93 லட்சம் உறுப்பினர்களில் 8.02 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு பெற்றுள்ளனர். புதிதாக இணைந்த உறுப்பினர்களில் அதிகபட்சமாக 18 வயது முதல் 21 வயது உடையவர்களில் 2.39 லட்சம் உறுப்பினர்களும் 22 வயது முதல் 25 வயது உடையவர்களில் 2.08 உறுப்பினர்களும் ஆவார்கள்.
Input & Image courtesy: News