பிரதமர் மோடியை விமர்சித்தவரே பாராட்டும்படி மாறியுள்ள காஷ்மீரின் நிலை- மோடி அரசால் ஏற்பட்ட சாதகமான மாற்றம்!
காஷ்மீரில் சாதகமான மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ஒரு காலத்தில் மோடியை விமர்சித்தவரே தனது வாயால் மோடியை மனமார பாராட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் நகரைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் ஷெஹ்லா ரசீதி சோரா டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர் சங்க முன்னாள் துணை தலைவர் ஆன இவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர் தற்போது பிரதமரை பாராட்டுகிறார். இது குறித்து எழுச்சி பெறும் பாரதம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறும்போது, நான் மாறவில்லை ஆனால் காஷ்மீரின் நிலைமை மாறி உள்ளது .
ஜம்மு காஷ்மீரில் கள நிலவரத்தில் சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் மக்கள் எப்படி அணிவகுத்து நின்றனர் என்பதை பார்த்தோம். ஆட்சியை புகழ்ந்து பேசுவது எனது நோக்கம் அல்ல .காஷ்மீர் மக்கள் தொடர்ந்து பிரதமரின் பெயரை உச்சரிப்பதாக நான் கூறவில்லை. ஆனால் மக்கள் இப்போது அரசிடம் புகார்களை எழுப்புகின்றனர். அதனை தங்கள் அரசாக கருதுகின்றனர் என்றார்.
களத்தில் எழுப்பப்படும் பிரச்சினைகளில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.காஷ்மீரில் மின்வெட்டு போன்று இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன் விடுதலைக்கான கோரிக்கை மட்டுமே மிக முக்கிய பிரச்சினையாக இருந்தது .ஆனால் இப்போது அது இல்லை. இப்போது சாலைகள் மின்சாரம் போன்றவைதான் பிரச்சினையாக எழுப்பப்படுகிறது என்று தெரிவித்தார்.
SOURCE:Dinathamizh