தேங்கும் பால் பாக்கெட் இனிப்புகள் ஆக்க முடிவு - பொங்கலுக்கு களமிறங்கும் ஆவின்!
விற்பனையாகாத பால் பாக்கெட்டுகளை பொங்கலுக்கு இனிப்புகளாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் பால் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் அதன் விற்பனை தற்போது குறைந்து இருக்கிறது. முன்பே காட்டிலும் தற்போது ஆவின் பால் மந்தமாகவே விற்பனைக்கு வருகிறது. குடும்பத் தலைவிகளும் ஆவின் பால் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்து வருகிறார்கள். இருந்தாலும் ஆவின் பால் நிறுவனம் கடந்த நவம்பர் 5ஆம் தேதியிலிருந்து ஆவின் பாலை லிட்டருக்கு ரூபாய் 12 உயர்த்தி இருக்கிறது.
விற்பனை ஆகாத பால் பாக்கெட்டுகளை பொங்கலுக்கு இனிப்புகள் செய்வதற்காக ஆவின் நிறுவனம் பயன்படுத்த இருக்கிறது. பல்வேறு வகையான இனிப்பு பொருட்களை தயாரிக்க ஆவ நிறுவனம் முடிவெடுத்து இருக்கிறது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் சார்பில் கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த தீபாவளி அன்று ஆவின் நிறுவனம் 200 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயத்தில் இருந்தது.
ஆனால் விலை அதிகமாக இருந்த காரணத்தினால் ரூபாய் 116 கோடிக்கு தான் இனிப்புகள் விற்பனையாகி இருந்தது. ஆனால் தற்பொழுது ஆவின் பால் விளையும் உயர்த்தப்பட்டு இருப்பதன் காரணமாக பாக்கெட்டுகளும் மீதமாகும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. எனவே மீதமாகும் பால் பாக்கெட் பயன்படுத்தி பால் சம்பந்தப்பட்ட இனிப்புகளை செய்வதற்கு ஆவின் நிறுவனம் முடிவெடுத்து இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar