வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை மீண்டும் செயல்படுகிறது!

இன்றைய இளைய தலைமுறையின் மட்டுமின்றி அரசு அலுவலக பயன்பாட்டுக்கும் தற்போதைய சூழலில் சமூக வலைதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எளிதில் தகவல் சென்றடைவதற்காக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் இன்றைய சூழலில் சமூக வலைதளங்கம் மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்து போய் உள்ளது.

Update: 2021-10-05 02:27 GMT

இந்நிலையில், நேற்று மாலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திடீரென்று சமூக வலைதளங்கள் முடங்கிபோனது. இந்த சமூக வலைத்தள முடக்கம் இரவிலும் தொடர்ந்ததால் பயனாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். அதிலும், பேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயனாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் இன்று அதிகாலை முதல் பேஸ்பக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில், சமூக வலைத்தள முடக்கத்திற்கு வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை பயனாளிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இது பற்றி வாட்ஸ்அப் தனது ட்விட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ''இன்று வாட்ஸ் அப்பைப் பயன்படுத்த முடியாத நிலை உருவானதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம். நாங்கள் மிகவும் கவனமுடன் வாட்ஸ்அப் வேலை செய்யத் தொடங்கியுள்ளோம். பொறுமையாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி. நாங்கள் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்போம்'' என்று கூறியுள்ளது.

அதே போன்று தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிக்கவும். அக்கறை கொண்டவர்களுடன் தொடர்பில் இருக்க எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வளவு நம்பியுள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source: Mark Zuckerberg

Image Courtesy:Search Engine Journal

Tags:    

Similar News