கருட சேவையின் போது எடையை கூட்டி குறைக்கும் ஆச்சர்யம் நிறைந்த நாச்சியார் கோவில்.!

கருட சேவையின் போது எடையை கூட்டி குறைக்கும் ஆச்சர்யம் நிறைந்த நாச்சியார் கோவில்.!

Update: 2020-07-09 02:04 GMT

கல் கருடன் எடை மாறும் நாச்சியார் கோயில் .

ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 கோயில்களில் ஒன்றாகவும் முக்தி தரும் 12 ஸ்தலங்களில் 11 ஆவது ஸ்தலமாகவும் இருக்கிறது நாச்சியார் கோயில். இங்கு வஞ்சளவள்ளி தாயார் சீனிவாச பெருமாளுடன் அருள் பாலிக்கிறார் .

பொதுவாக பெருமாள் கோயிலில் பெருமாளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் . ஆனால் இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது . இந்த ஊரின் பெயரே நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது . முன்பு சுகந்தவனம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் மேதாவி என்கிற மகரிஷி திருமகளான லஷ்மியே தன் மகளாக அவதரிக்க வேண்டும் என்று கடும் தவம் புரிந்து வந்தார் .

அதே போல் லஷ்மி தேவி அவரின் முன்பு தோன்றினாள் . முனிவர் அவளுக்கு வஞ்சுளவல்லி என்று பெயரிட்டு வளர்த்தார் . திருமண வயது வந்தவுடன் பெருமாளே கருடன் மீது ஏறி வந்து வஞ்சுளவள்வியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டார். அதற்கு ஒப்புக் கொண்ட மாரிஷி இந்த திருத்தலத்தில் தன் மகளுக்கே முதல் மரியாதையும் முக்கியத்துவமும் தரப்பட வேண்டும் என்று வரம் வாங்கிக் கொண்டார்.

பெருமாளும் அவ்வாறே வரமளித்தார் . அதனாலேயே இன்றும் இங்கு தாயாருக்கு முக்கியத்துவம் அளிக்கபடுகிறது. இங்குள்ள சக்கரத்தாழ்வார் மேதாவி மகரிஷியால் கண்டெடுக்கபட்டு பிரதிஷ்டை செய்யபட்டவர். 42 நாட்கள் தொடர்ந்து இவரை வலம் வந்து வழிபட்டால் தடைகள் தோளங்கள் நீங்கும் . மேலும் இக்கோயிலின் சிறப்பே இங்குள்ள கருடன்தான்...கோயில் திருவிழாவின் போது கருட சேவைக்காக கருடனை வெளியே தூக்கி வரும் போது எடை அதிகரித்துக் கொண்டே வரும். வெளியே வரும் போது நான்கு பேர் மட்டுமே தூக்கி வருவார்கள் . போக போக எடை கூடி சுமப்பவர்கள் எண்ணிக்கை 8,16, 32 என்று அதிகரிக்கும் அந்த அளவுக்கு கருடன் எடை கூடுவார் . வீதி உலா முடியும் சமயத்தில் படிப்படியாக எடை குறைந்து 32, l 6, 8 என்று எண்ணிக்கை குறைந்து நான்கு பேர் மட்டும் தூக்கும் அளவு குறைந்து விடுவார். இந்த அதிசயம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரு கிறது .

தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியாக 10 கி மி தொலைவில் உள்ளது நாச்சியார் கோயில் . 

Similar News