#Profile சுயமாக உருவான இந்தியாவின் பெண் பில்லியனர்- யார் இந்த பால்குனி நாயர்? #Nykaa
58 வயதான நிறுவனர் ஃபால்குனி நாயர் ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, (Bloomberg Billionaires Index) இந்தியாவின் பணக்கார பெண் பில்லியனர் ஆனார்.
அழகுப்பொருள் ஸ்டார்ட்அப் நிறுவனம் Nykaa புதன் அன்று பங்குச் சந்தையில் அறிமுகமானது. வலுவான மற்றும் லாபகரமான அறிமுகத்துக்கு பிறகு, 58 வயதான நிறுவனர் ஃபால்குனி நாயர் ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, (Bloomberg Billionaires Index) இந்தியாவின் பணக்கார பெண் பில்லியனர் ஆனார்.
Nykaa இன் பாதி பங்குகளை சொந்தமாக வைத்திருக்கும் நாயர், புதன் கிழமை வர்த்தகம் செய்யத் தொடங்கியபோது நிறுவனத்தின் பங்குகள் 89% வரை உயர்ந்ததால், இப்போது $6.5 பில்லியன் மதிப்புடையவராகிறார். Nykaa இன் தாய் நிறுவனமான FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ், பங்குச் சந்தையை வந்தடைந்த இந்தியாவின் முதல் பெண் தலைமையிலான யூனிகார்ன் (Unicorn- $1 பில்லியனுக்கு மேல் மதிப்புடைய அரிதான ஸ்டார்ட் அப்கள்) ஆகும்.
ஒதுக்கீட்டின் போது Nykaa பங்குகளைப் பெறத் தவறியவர்கள், சில லாப-புக்கிங்கிற்காகக் காத்திருந்து, இரண்டு வருட இலக்கான ₹3600க்கு, ஒரு பங்கிற்கு சுமார் ₹1900 என்ற விலையில் வாங்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் நம்புகிறார்கள்.
முன்னாள் முதலீட்டு வங்கியாளர் ஃபால்குனி நாயரால் 2012 இல் நிறுவப்பட்ட Nykaa , இணையதளம், 80 கடைகள் மூலம் 4,000 அழகு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் ஃபேஷன் பிராண்டுகளை வழங்குகிறது.
ஐஐஎம் அகமதாபாத்தில் பட்டம் பெற்ற பிறகு, ஃபால்குனி AF பெர்குசன் & கோ நிறுவனத்தின் ஆலோசகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் 18 ஆண்டுகள் கோடக் மஹிந்திரா வங்கியில், பல வணிகங்களுக்கு தலைமை தாங்கினார் மற்றும் கோடக் மஹிந்திரா முதலீட்டு வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்தார், மேலும் வங்கியின் நிறுவன பங்குகள் பிரிவு, கோடக் செக்யூரிட்டிஸில் இயக்குநராக இருந்தார்.
1600 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு, அழகு மற்றும் வாழ்க்கை முறை சில்லறை வணிக சாம்ராஜ்யமான Nykaa ஐ உருவாக்கியுள்ளார் ஃபால்குனி. இது இந்தியாவின் முன்னணி அழகு விற்பனையாளராக உருவெடுத்துள்ளது, அதன் சொந்த லேபிள் உட்பட 1500+ பிராண்டுகளின் போர்ட்ஃபோலியோ ஆன்லைன் மற்றும் இந்தியாவில் 80 கடைகளில் கிடைக்கிறது.