ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்க மறுக்கும் தி.மு.க?
ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீரால் மேட்டூர் அருகே பயிர் செய்துமடைந்து இருப்பதால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தீவிர கோரிக்கை.
மேட்டூர் அருகே கோனூர் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீரினால் பயிர்கள் சேதமடைந்து இருக்கிறது. இதற்கு இழப்பீடு தரவேண்டும் என்று விவசாயிகள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்கள். சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பயின்ற கனமழையால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில் மேட்டூர் அருகே கோனூர் கிராமத்தில் உள்ள சந்தை தானப்பட்டி ஏறி நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது. இதனால் கருப்பு தக்காளி, சோளம், ராகி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படுத்துகிறது.
ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீரால் மேட்டூர் அருகே பயிர் செய்துமடைந்து இருப்பதால் இழப்பீடு தரவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து இருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் பயிர்கள் அழுகி வீணாகி வருகிறது. இதன் காரணமாக பெரும் வருவாய் இழப்பிற்கு ஆளான விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் தர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar