கோவில் தேர் இழுக்கப்படாமல் நடைபெறும் திருவிழா!

கோவில் தேர் இழுக்கப்படாமல் நடைபெறும் கோவில் நிகழ்ச்சி, பக்தர்கள் ஏமாற்றம்.

Update: 2022-01-19 00:30 GMT

இந்திய முழுவதும் நோய் தாக்குதல் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு வேளையில் கோவில் தொடர்பான விசேஷ நாட்களில் மக்கள் கோவிலில் வருவதை தடுப்பதற்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு விதித்துள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் 'தைத் தேர்' திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெறும் 'பூபதித் திருநாள்' நிகழ்ச்சி ஜனவரி 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாளான திங்கள்கிழமை தைத் தேர் நிகழ்ச்சி நடைபெற்றது.


ஸ்ரீ ரெங்கா கோபுரம் எதிரே உள்ள கோயில் தேர் அலங்கரிக்கப் பட்டிருந்தது. சன்னதியில் இருந்து அதிகாலையில் கோவில் தேருக்கு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீநம்பெருமாள் மற்றும் 'உபய நாச்சியார்' ஆகியோர் தனித்தனி பல்லக்குகளில் எடுத்து வரப்பட்டனர். மற்றும் பூஜைகள் நடந்தன. இருப்பினும், கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக 'தேரோட்டம்' இல்லை என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


அதைத்தொடர்ந்து தெய்வங்கள் ஸ்ரீ தாயார் சந்நிதிக்கும், அங்கிருந்து கருவறைக்கும் கொண்டு செல்லப்பட்டன. 'பூபதித் திருநாள்' நிகழ்வு ஜனவரி 19ஆம் தேதி 'ஆலும்பல்லக்கு' நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. எனவே கோவில் தீர்க்கப்படாமல் நடைபெறும் நிகழ்ச்சி மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.  

Input & Image courtesy: The Hindu




Tags:    

Similar News