சர்ச்சைக்கு மத்தியில் நோட்டோவில் இணைந்த பின்லாந்து: அதிர்ச்சியில் ரஷ்யா!
ரஷ்யாவின் அண்டை நாடான பின்லாந்து தற்போது நோட்டோ அமைப்பில் இணைந்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக உக்ரைன் ரஷ்யாவிடம் இருந்து விலகி நோட்டோவில் இணைவது தான் பெரும் பிரச்சனையாக ரஷ்யா கூறிவந்தது. குறிப்பாக உக்ரைன் தன்னுடைய முழு கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ள ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகள் எண்ணிக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றிற்கு முழு மனதாக உக்கரை ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் வலுவாக இருந்து வந்து இருக்கிறது.
இதன் காரணமாக மற்ற உலக நாடுகளின் பொருளாதார மட்டுமல்லது, விலைவாசிகள் பல்வேறு எற்ற, இறக்கங்கள் சந்தித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் ஒரு சூழ்நிலையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நோட்டோ என்று கூட்டமைப்பில் கடந்த ஆண்டு உக்ரைன் இணைய முயற்சி செய்தது . எனவே தங்களது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் வரும் என கருதி ரஷ்யா அதன் மீது போர் தொடுத்தது.
இந்த ஒரு நிலையில் பின்லாந்தும், ஸ்வீடனும் இந்த அமைப்பில் சேர விண்ணப்பித்திருந்தன. இதில் பின்லாந்து நோட்டோவில் இணைய தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி நோட்டா அமைப்பில் 31-வது நாளாக பின்லாந்து இணைந்து இருக்கிறது. இந்த ஒரு தகவல் உலக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் ரஷ்யா சார்பில் எச்சரிக்கை பின்லாந்து நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News