டெல்லியில் சனிக்கிழமை அதிகாலை ஒரு அதிர்ச்சி ஊட்டும் சம்பவமாக பொம்பை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பற்றியதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் நேரில் பார்த்த நபர் இது LPG சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தானது பிரதாப் நகர் பகுதியில் நடந்துள்ளது. மேலும் அதிகாலை 3:47 மணியளவில் தங்களுக்கு தீ பிடித்துள்ளதாகத் தகவல் வந்ததாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து உடனடியாக 18 தீயணைப்பு டெண்டர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தனர். தற்போதுள்ள கிடைத்துள்ள தகவலின் படி, தீயணைப்பதற்கு 28 தீயணைப்பு வீரர்கள் அங்குக் குவிந்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த பிறகு, தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த பல தொழிலாளர்கள் தப்பித்துப் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு தொழிலாளர் சரியான நேரத்தில் தப்பிக்க முடியாததால் சம்பவம் நடந்த இடத்தில் இறந்துள்ளார். தீயை அணைப்பதற்கான அனைத்து வேளைகளும் நடந்து கொண்டிருக்கின்றது மற்றும் தீ பற்றியதற்கான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
இந்த தொழிற்சாலையில் குழந்தைகளுக்கான பொம்மைகள், அழகு சாதன பொருட்கள், பைகள் மற்றும் நைல் பாலிஷ் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன, தயாரிப்புகள் அனைத்தும் தீயில் கரைந்துள்ளன.
தீயணைப்பு அதிகாரி ராஜிந்தர் அத்வால் தகவலின் படி, LPG சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று நேரில் கண்ட சாட்சி தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், "தீயணைப்பு பணியின் போது ஒரு வீரர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயைக் கட்டுப்படுத்தியுள்ளோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.