முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது!

முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது!

Update: 2019-12-27 06:06 GMT

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மீதி உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது,சுமார் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர்,காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்,இன்று மட்டும்  37830 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்கள், 4700 ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் இடங்கள், 260 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.



கிராம உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு வெள்ளை நிற வாக்குச்சீட்டு, கிராம ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டு, கிராம ஒன்றிய ஊராட்சி உறுப்பினருக்கு பச்சைநிற வாக்குச்சீட்டு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சள் நிற வாக்குச்சீட்டு  பயன்படுத்தப்பட உள்ளன முதற்கட்டமாக 24680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது, சுமார் 4 லட்சத்து 2 ஆயிரத்து 400 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.


பதட்டமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர் தேர்தல் ஆணையம், காலை 7 மணி முதலே வாக்காளர்கள் காத்திருந்துதங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர், இரண்டாம் கட்ட தேர்தல் வருகின்ற திங்கட்கிழமை 30 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News