முதன் முதலாக ரயில் வசதி பெறப்போகும் பழங்குடியினர் மாவட்டம் - இது நம்ம ஜனாதிபதி ஊர் என்பது கூடுதல் சிறப்பு!
ஒடிசா மாநிலத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சொந்த ஊருக்கு முதன்முதலாக ரயில்வே சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் நிறைந்த மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்ரங்பூர்தான் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சொந்த ஊராகும். இந்த நிலையில் தென்கிழக்கு ரெயில்வேயில் நான்கு புதிய ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது . அவற்றில் மூன்று ரயில்கள் மயூர்பஞ்ச் மாவட்டத்துக்கு இயக்கப்படும் என்பதால் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சொந்த ஊரான ராய்ரங்பூர் முதல் முறையாக பயணிகள் ரயில் வசதி பெறுகிறது.
இந்த தடவை மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் இயக்கப்படுவது இதுவே முதல் முறை என ரயில்வே மந்திரி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. இது மலைப்பகுதி மேம்பாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
SOURCE :DAILY THANTHI