இந்திய ரயில்வே வரலாற்றில் ரயில்வே வாரிய தலைவராக முதல்முறையாக பெண் நியமனம்
முதன் முதலாக ரயில்வே வாரியத்தின் தலைவராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;

ரயில்வே வாரியத்தின் தலைவராக இருந்த அனில்குமார் லகோதியின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதை தொடர்ந்து ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக ஜெயா வர்மா சின்ஹா என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரயில்வே வரலாற்றில் ரயில்வே வாரிய தலைவராக ஒரு பெண் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தற்போது இந்திய ரயில்வே மேலாண்மை நிர்வாக உறுப்பினராக இருக்கும் ஜெயா வர்மா சின்ஹா அலகாபாத் பல்கலையில் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு இந்திய ரயில் போக்குவரத்து சேவை பிரிவில் இணைந்தார் . வடக்கு தெற்கு மற்றும் மதிய ரயில்வே மண்டலங்களிலும் பணியாற்றி உள்ளார்.
SOURCE :DAILY THANTHI