சென்னை: பத்மநாப சுவாமி கோவிலில் மீண்டும் நடைபெறுமா பூ உரமாக்கல் திட்டம்?

சென்னையில் உள்ள ஆனந்த பத்மநாப சுவாமி கோயிலில் மீண்டும் துவங்கப்படுமா? பூ உரமாக்கல் திட்டம்.

Update: 2021-12-27 00:30 GMT

சென்னை அடையாரில் உள்ள ஆனந்த பத்மநாப சுவாமி கோயிலில் கடந்த ஆண்டுகளுக்கு, குறிப்பாக நோய் தொற்று ஏற்படுவதற்கு முன்பு 'பூக்கள் உரமாக்குதல்' திட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக இந்த திட்டம் பக்தர்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றுள்ளது. ஏனெனில் சுவாமிக்கு படைக்கப்படும் பூக்கள் வாடிய பிறகு அவற்றை மீண்டும் பயன்படுத்தும் வகையில் உரமாக்கல் திட்டம் நல்ல முயற்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும், நோய்தொற்று இந்த செயல்களில் மிகவும் தாமதத்தை ஏற்படுத்தியது. 


தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக கோவில்கள் முழுமையாக மூடப்பட்டன. பக்தர்களுக்கு அனுமதி இன்றி கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இத்தகைய நோய் தொற்று செய்கைகள் காரணமாக இந்த திட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் இந்த கோவில் நிர்வாகத்தின் முக்கியமாக முயற்சியாக இந்த திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளையும் செய்கிறார்கள்.  மேலும் இந்தத் திட்டத்திற்காக கோவிலில் ஏற்கனவே 5 உரம் நிரப்பும் பூத்தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. 


மேலும் உரம் தயாரிப்பதற்கு என்று பணியாளர்களையும் கோவில் நிர்வாகம் அமர்த்தி உள்ளது. அவர்கள் முழுமையாக தயாரிக்கப்பட்ட உரங்களை வெளியில் எடுத்து பாக்கெட்டுகள் ஆகவும், ஒரு பாக்கெட் ரூபாய். 60-தாக விலையை நியமிக்கிறார்கள். மேலும் வெளியிலிருந்து இதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நிதி தேவைப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

Input & Image courtesy: The Hindu



Tags:    

Similar News