பங்களாதேஷ்: இந்து சிறுபான்மையினருக்கு நடக்கும் அடக்குமுறை!
பங்களாதேஷின் சிறுபான்மை இந்துக்களுக்கு தொடர்ச்சியான வகையில் நடக்கும் அடக்குமுறைகள்.
பங்களாதேஷின் சிறுபான்மை இந்துக்களுக்கு, இது மனித உரிமைகள் இல்லாத குடிமக்களாக வங்காளதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகள் நடப்பதாக கூறப்படுகிறது. பங்களாதேஷில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மத்தியில் அடக்குமுறை, பலிவாங்கல் மற்றும் அச்சத்தை தூண்டுவது தடையின்றி தொடர்கிறது. சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான வகுப்புவாத வன்முறையானது, வேண்டுமென்றே புறக்கணிக்க பட்டுள்ளதா? பங்களாதேஷில் இந்து மக்கள் தொகை எப்படி இருந்தது? என்பதை சர்வதேச ஊடகங்கள் கூட எடுத்துரைக்க தவறிவிட்டன. கட்டாய மதமாற்றம் ஆகியவற்றின் கீழ் இந்துக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு உதாரணமாக வங்காளத்தில் ஏற்கனவே பல்வேறு சம்பவங்கள். சமீபத்தில் நடந்த Oplndia வெளியிட்ட செய்தியின் படி, பங்களாதேஷின் காக்ஸ் பஜார் நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிறுபான்மை இந்து குடும்பத்தின் வீட்டில் ஜனவரி மாதம் ஒரு வெறித்தனமான கும்பல் ஒன்று கூடி, அவரது குடும்பத்தினர் கோவில் கட்டுவதை எதிர்த்தது. அடுத்த நாளே சுரேஷ் சந்திரா சுஷில் மாரடைப்பால் இறந்தார். ஒரு வாரத்திற்குள் அவரது ஐந்து மகன்கள் சுஷிலுக்கு சடங்கு செய்துவிட்டு தகனக் கூடத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, வேனில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர்.
இதற்கு முன் இந்துக்களுக்கு ஏற்பட்ட மற்றொரு பின்னடைவாக, கடந்த ஆண்டு அக்டோபரில் துர்கா பூஜையின் போது இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து நீதி விசாரணை நடத்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. உலக வரலாற்றில் இத்தகைய மத அடிப்படையிலான பாகுபாடுகள் காரணமாக அப்பாவி சிறுபான்மை இந்துக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:ABP News