போர் எதிரொலி: மறைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இயேசு சிலை!

Update: 2022-03-08 12:04 GMT

கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரையில் உலக போர் ஏற்பட்டது. அந்த காலக்கட்டத்தில் உக்ரைன் வீவ் நகரில் இருக்கும் ஆர்மீனியன் சர்ச் ஒன்றில் இருந்த இயேசு கிறிஸ்துவின் சிலை, வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக மறைவிடத்தில் எடுத்து செல்லப்பட்டது.

அதே போன்று தற்போது உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலால் பல நகரங்கள் சிதைந்து வருகிறது. குறிப்பாக சர்ச் உள்ளிட்ட ஆலயங்கள் மீதும் தாக்குதல் தொடர்கிறது. இது போன்று தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்வதற்காக இயேசு சிலைகள் மறைவிடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி வீவ் நகரில் இருந்து இயேசு சிலை மறைவிடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இது பற்றிய புகைப்படத்தை கிழக்கு ஐரோப்பிய ஊடக அமைப்பு நெக்ஸ்டா ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News