மத மாற்ற தடை மசோதா மேலவையில் தாக்கல் - இனி பிடி இறுகும்
மதமாற்ற தடைச் மசோதா மேலவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பா.ஜ.க உறுப்பினர்கள் இடையே உற்சாகத்தை அளித்துள்ளது.
கர்நாடக சட்ட மேலவையில் ஆளுங்கட்சியை சேர்ந்த பா.ஜ.கவின் பெரும்பான்மை தற்போது கிடைத்துள்ளதால் மத மாற்ற தடை மசோதாவை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முறை மழைக்கால சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய இந்த சட்டம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தாக்கல் செய்வதற்கு பாரதிய ஜனதாவுககு பெரும்பான்மை கிடைக்கவில்லை ஆனால் தற்போது சட்டசபையில் அதிகாரம் பெரும் மசோதாக்கள் மேலவைக்கு வரும்போது தோல்வியடைகிறது. அரசுக்கும் இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பாரதிய ஜனதா அரசின் முக்கிய மசோதாவாக மத மாற்ற தடை மசோதா கூட்டத்தொடரில் 2020 ஒன்றும் டிசம்பர் 23-ஆம் தேதி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சட்டசபையில் தாக்கல் செய்து அங்கீகாரம் பெற்றது. ஆனால் அப்போது மேலவையில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இதனை நிறைவேற்ற முடியாமல் போனது.
ஆனால் தற்போது மேலவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை மற்றும் உறுப்பினர்கள் பலம் அதிகரித்து உள்ளது. சில மாதங்களுக்கு முன் நடந்த, ஆசிரியர்கள், பட்டதாரிகள் தொகுதி தேர்தலில், நான்கில் இரண்டு இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால், மேலவையில் பா.ஜ.,வின் உறுப்பினர் பலம் அதிகரித்தது. எனவே தற்போது மேலவையில் மொத்த உறுப்பினர்கள் 75 இதில் 40 இடம் வைத்திருந்தால் பெரும்பான்மை கிடைக்கும். மழைக்கால கூட்டத்தொடரின் போது மதமாற்றத் தடை மசோதா தாக்கல் செய்ய அரசு விரும்புகிறது.
Input & Image courtesy:Dinamalar News