பாஜகவில் இணைந்த இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமைத் தளபதி!
தேசத்தின் கட்டமைப்பில் எனது பங்களிப்பை அளிக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளேன் என்று பாஜகவில் இணைந்த இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமை தளபதி கூறியுள்ளார்.
இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமை தளபதி ஆர்.கே.எஸ் பௌதாரியா பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராதாக்கூர் கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்தே ஆகியோர் முன்னிலையில் பௌதாரியா பாஜகவில் இணைந்தார்.
உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பௌதாரியா பாஜகவில் இணைந்தது குறித்து கூறுகையில் ,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் பாதுகாப்பு படைகளை வலுப்படுத்தவும் நவீனமயமாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .இது வலுவான நாடாக இந்தியா உருவெடுக்க உதவும். தேசத்தின் கட்டமைப்பில் எனது பங்களிப்பை அளிக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளேன் என்றார்.
பௌதாரியா உத்தரபிரதேசத்தில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆங்கிலத்தில் ஆளும் ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியமான வரப்பிரசாத் ராவ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் .இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பிரதமர் மோடி மிகுந்த ஆற்றல்மிக்க அரசியல் தலைவராக திகழ்கிறார். நாட்டின் வளர்ச்சிக்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்றார்.
SOURCE :Dinamani