இந்த நாடுகளில் 4வது அலை கொரோனா உருவாகும்: WHO எச்சரிக்கை! பல நாடுகள் அதிர்ச்சி!
The pandemic may take his fourth wave : warned by WHO
உலகம் முழுவதும் தற்போது உருமாறிய கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் பல்வேறு அலைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் தற்போது இரண்டாவது அலை நடைபெற்று வருவதாகவும், மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மற்ற சில நாடுகளில் மூன்றாம் அலை கொரோனா நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது, டெல்டா வகை கொரோனா வைரஸ் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் 4வது அலை உருவாகியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கருத்துக் கூறுகையில், "அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிவதோடு, தனிமனித இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் அடுத்தடுத்த அலை உருவாகும் என்று ஏற்கனவே எச்சரித்திருந்தோம். அதேபோல தற்போது நடந்து இருக்கிறது என்று WHO கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்ட தீவிரமாக பரவக்கூடிய தன்மை கொண்ட டெல்டா வகை வைரஸ், 22 மத்திய கிழக்கு நாடுகளில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
குறிப்பாக, மொரோக்கோ தொடங்கி பாகிஸ்தான் வரை பரவியுள்ளது. இப்பகுதிகளில் 4வது அலை கொரோனா பரவி வருகிறது. பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று WHO வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Image courtesy: wikipedia