'Free Fire விளையாட்டை தடை செய்ய வேண்டும்' : இந்து இளைஞர் முன்னணி!

Update: 2021-06-30 05:49 GMT

இளைஞர்களின் மனதையும் எண்ணத்தையும் கெடுக்கும் விளையாட்டான ப்ரீ பையர் (Free Fire) விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று இந்து இளைஞர் முன்னணி சார்பாக மதுரை ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் பிள்ளைகளின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் பெரும்பாலான மாணவர்களை கல்வியில் இருந்து திசை திருப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட ப்ரீ பையர் விளையாட்டை அதிகம் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதுதொடர்பாக பெற்றோர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று மதுரை மாநகர் (HYF)இந்து இளைஞர் முன்னணி சார்பாக மாணவர்களின் வாழ்க்கையையும்,எண்ணங்களையும் சீரழிக்கும் வகையில் மற்றும் சமூக விரோத செயலாகிய சுடுதல், குண்டு வீசுதல், கொள்ளை அடித்தல், கொலை செய்தல், சண்டை போடுதல் என தீய எண்ணங்களை மனதில் பதிக்க வைத்து தீவிரவாதியாகக்கூடிய அளவிற்கு மாணவர்களின் எண்ணங்களை திசை திருப்பும் "free fire" என்ற ஆன்லையன் விளையாட்டை தடை செய்ய கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பி.பாண்டி பிடான் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

மாணவர்களின் மனதில் தீய எண்ணத்தை வளர்க்கும் இது போன்ற விளையாட்டுகளுக்கு அரசு தடை செய்ய வேண்டும் என்பதே அனைத்து பெற்றோர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் தற்போது இருக்கும் இளைஞர்கள் தங்கள் யோசிக்கும் திறனை இழந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : Hindu Munnani

Similar News