விளையாடும் போது ஹிஜாப் அணிய தடை? எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி வரப்போகும் சட்டம்!

French parliament to vote on bill banning hijab at sports events;

Update: 2022-02-18 17:07 GMT

விளையாட்டுப் போட்டிகளில் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்யும் வரைவு மசோதா பிரான்சின் தேசிய சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. 

மசோதாவின் குறிப்பிட்ட ஷரத்து விளையாட்டு கூட்டமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் "மத சின்னங்களை அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடுகிறது.

இருப்பினும், இந்த நடவடிக்கையானது, கீழ்சபையில் உள்ள அரசாங்கம் மற்றும் அதன் கூட்டாளிகளால் எதிர்க்கப்படுகிறது. தேசிய சட்டமன்றத்தில் இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் ஹிஜாப் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் , விளையாட்டுப் போட்டிகளில் ஹிஜாப் அணிவதை தடை செய்யும் மசோதா மீது பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் அவை வாக்களிக்க உள்ளது.

ஹிஜாப் மற்றும் புர்கா தொடர்பில் பிரான்சின் வரலாறு

2004 ஆம் ஆண்டில், பிரெஞ்சு பொதுப் பள்ளிகளில் மத அடையாளங்களின் வரிசையில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.  யூத கிப்பா மற்றும்  கிறிஸ்தவ சிலுவைகளை அணிவதையும் தடை செய்தது.

2010 ஆம் ஆண்டில், பொது இடங்களில் நிகாப் மற்றும் புர்கா போன்ற முழு முகத்திரைகளை தடைசெய்து, நாடு தழுவிய தடையை அமல்படுத்திய முதல் ஐரோப்பிய நாடு ஆனது.

இந்த சட்டத்திற்கு இணங்காத பெண்களுக்கு 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும். பர்தா அணியுமாறு மனைவிகளை வற்புறுத்தும் ஆண்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் 30,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும்.

ஒரு மைனர் பெண்ணை பர்தா அணிய வற்புறுத்தினால், அபராதம் 60,000 யூரோவாகவும், இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். இந்த சட்டம் சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும். 2014 இல், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் தடையை உறுதி செய்தது.

Tags:    

Similar News