தடுப்பூசிலாம் வேஸ்ட் என பிரச்சாரம்: பிரான்ஸ் எம்.பி., கொரோனாவால் மரணம்!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. ஆனால் அது போன்ற தடுப்பூசிகளுக்கு சிலர் வேண்டும் என்றே பொய் பிரச்சாரம் மேற்கொள்வதையும் பார்க்க முடிகிறது. அதில் எதிராக பேசிய பல அரசியல் தலைவர்களும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

Update: 2022-01-09 03:39 GMT

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் எம்.பி.யும், அரசியல் தலைவருமான ஜோஸ் எவ்ரார்டு 76, என்பவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்த நிலையில் பரிதாபமாக கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மரணம் என்பதை பார்த்தாவது உலகத்தில் மற்றவர்கள் தடுப்பூசிக்கு எதிராக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டாம் என்ற கருத்துக்கள் இணையத்தில் பரவத் தொடங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஒரு கோடிக்கும் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News