பேஸ்புக் பெயர் மாற்றம்: தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு!
சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் அடுத்த கட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தனது கவனத்தை திருப்பி வருவதாகவும் அதனை பிரதிபலிக்கும் விதமாக நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் அடுத்த கட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான 'மெட்டாவெர்ஸ்' நோக்கி தனது கவனத்தை திருப்பி வருவதாகவும் அதனை பிரதிபலிக்கும் விதமாக நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கலந்து கொண்டு பேசியதாவது:
சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் 'பேஸ்புக்'கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிதாக "மெட்டா" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். கற்றுக் கொண்ட அனைத்தையும் வைத்து புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. அதே நேரத்தில் தங்கள் 'ஆப்'களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source,Image Courtesy: ANI