காதி பொருள் விற்பனை 5,051.72 கோடியாக உயர்வு: மத்திய அரசு ஊக்கத்தினால் நடந்த சாதனை!

இந்தியாவில் காது பொருட்களின் விற்பனை 5051.72 கோடிக்காக விற்பனையாகி இருக்கிறது.

Update: 2022-12-25 01:47 GMT

நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் காதி நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மேலும் காதி நிறுவனங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் காதி விற்பனை அதிகரிக்க வேண்டும் என்று முனைப்புடன் பல்வேறு சீர்திருத்தங்களும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.


காதி நிறுவன விற்பனை நிலையங்களை புதுப்பிப்பதன் மூலமாக காதி துறையை மறு சீரமைப்பு செய்வதை, காதி சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சித் திட்டத்தை நோக்கமாக கொண்டிருக்கிறது. மத்திய அரசு காதி சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தற்பொழுது விற்பனை நிலையங்களை புதுப்பிப்பது, காது பொருட்கள் விற்பனை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இதனுடைய விற்பனை 4,211 கோடிக்கும், 2020ல் 3,527 கோடிக்கும், தற்பொழுது 5,051 கோடிக்கும் காதி பொருட்கள் விற்பனையாகி பெரும் சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது.


கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டில் விற்பனை சற்று குறைந்தது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 2019 ஆம் ஆண்டில் 2,966 லட்சம் செலவில் 328 விற்பனை நிலையம் புதுப்பிக்கப்பட்டனர். தற்பொழுது 2021 ஆம் ஆண்டில் 47 விற்பனை நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் 3093 லட்சம் செலவில் 26 காதி விற்பனை நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. மதுரையில் 130 லட்சம் செலவில் 11 விற்பனை நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகவலை மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் இணை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News