Gen Z இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து உயிருக்கு பயந்து நாட்டை விட்டு ஓடிய அதிபர்!!
தென்கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் ஏற்பட்ட ஊழல், மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு, வறுமை போன்ற பல பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அந்த நாட்டில் இருக்கும் Gen Z இளைஞர்கள் கடந்த 25ஆம் தேதி முதல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு 22 பேர் இறந்த நிலையில், ராணுவத்தில் இருக்கும் ஒரு பிரிவினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது அந்நாட்டில் இருக்கும் அதிபர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு ராணுவ மூலம் ஆட்சியை கலைப்பதற்கு திட்டம் தீட்டி வருவதாக அந்த நாட்டின் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா கூறினார். இதைத்தொடர்ந்து அதிபர் பிரான்ஸ் ராணுவ விமானத்தின் மூலம் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாகவும், என் உயிரை பாதுகாக்க பாதுகாப்பான இடத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாய சூழலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிடவில்லை. இந்நிலையில் அதிபர் தப்பி ஓடியதை தொடர்ந்து மடகாஸ்கரில் ராணுவம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் விரைவில் பிரதமர் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.