நாடு முழுவதும் அடுத்த ஐந்தாண்டுக்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - அமித்ஷா!

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறினார்.

Update: 2024-05-27 10:33 GMT

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையில் சட்டம் இருக்கக் கூடாது என்று அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத், கே.எம் முன்ஷி போன்ற சட்ட மேதைகள் தெரிவித்து இருந்தனர். எனவே பொது சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும். இது 1950 களில் இருந்தே எங்களது செயல் திட்டமாக உள்ளது. முழு பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்தியிருக்கிறோம்.

விவாதம் நடத்தப்பட வேண்டும். யாராவது கோர்ட்டுக்கு செல்வார்கள் அங்கு கோர்ட்டின் கருத்து வரும். அதன் பிறகு நாடாளுமன்றமும் மாநில சட்டசபைகளும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி சிந்திக்க வேண்டும் .அதன் அடிப்படையில் உத்தரகாண்ட் அரசு கொண்டுவந்த மாதிரி சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்து பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். அதுபோல் எங்களது அடுத்த ஆட்சி காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவோம். அதற்கான காலம் வந்துள்ளது.அதன் மூலம் செலவு குறையும்.

பா.ஜனதா மத அடிப்படையில் பிரச்சாரம் செய்யவில்லை.முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது மதப் பிரச்சாரம் என்றால் அதைத் தொடர்ந்து செய்வோம் .ஓட்டு சதவீதம் தொடர்பாக தேர்தல் கமிஷனை எதிர்க்கட்சிகள் புகார் சொல்வது தவறு. பாஜக தோல்வியடைந்த சட்டசபை தேர்தல்களிலும் இதேமுறையை தான் தேர்தல் கமிஷன் பின்பற்றியது. தாங்கள் சந்திக்க போகும் தோல்வியை மறைக்க தேர்தல் கமிஷன் மீது பழி போடுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Tags:    

Similar News