ஸ்டாலின் கோவை வருகைக்கு எதிர்ப்பு.. இந்திய அளவில் #GoBackStalin ட்விட்டரில் டிரெண்டிங்.!

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் தமிழகத்திலேயே கோவை, திருப்பூர் மாவட்டம் அதிகளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்த மாவட்டத்தில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதாக பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

Update: 2021-05-30 02:40 GMT

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் தமிழகத்திலேயே கோவை, திருப்பூர் மாவட்டம் அதிகளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்த மாவட்டத்தில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதாக பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றுக்கு எதிராக ஆட்சியாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் தற்போது புதியதாக அமைந்துள்ள திமுக அரசு வாக்களித்த இடங்களிலும் ஒரு மாதிரியும், வாக்களிக்காத மாவட்டங்களில் ஒரு மாதிரியான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு அதற்கான ஆலோசனைகளை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபேக்ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் செய்யப்பட்டுள்ளது. இந்த டிரெண்டிங்கால் திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News