மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிய வேண்டும்.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிந்தால்தான் நாட்டின் வளர்ச்சி மேன்மையடையும்.
மாநில அரசும், மத்திய அரசும் மக்களின் மேம்பாட்டுக்காக பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால்தான் நாட்டின் வளர்ச்சி மேன்மையானதாக அமையும். தற்காலத்தில் நுகர்வுப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. உடனடியாக தேவை இல்லாத பொருட்களை வேண்டாம் என்று சொல்லும் மனப்பான்மை வேண்டும். நாளைய தலைமுறைக்கு பூமியை வாழத்தக்கதாக ஒப்படைக்க வேண்டியது நமது கடமையாகும். தமிழ்நாடு அரசு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது.
பொதுமக்கள் இத்தகைய பொருட்களை தவிர்க்க வேண்டும். தேவை குறையும்போது உற்பத்தி தானாகவே குறைந்துவிடும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்தார். மத்திய அரசின் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் நேற்று கள்ளக் குறிச்சியில் நடத்திய நான்கு நாட்கள் புகைப்பட கண்காட்சியைத் தொடங்கி வைத்து பேசும் போது ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் ஜடாவத் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் நலத் திட்டங்கள், சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை ஆகிய மையக் கருத்துகளில் புகைப்படக் கண்காட்சி சண்முகா மஹாலில் நேற்று காலை தொடங்கி முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறுகின்றது.
Input & Image courtesy: News