3,000 மாணவிகளுக்கு 10 பேராசிரியர்கள் தான்: அரசு கல்லூரிகளில் நிலைமை என்ன?

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் மோதிர மாணவிகளுக்கு 10 பேராசிரியர்கள் தான் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Update: 2023-03-21 01:17 GMT

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3000 மாணவிகள் படித்து வருகிறார்கள்.இங்கு மூவாயிரம் மாணவிகளுக்கு பத்து பேராசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மகளிர் கலைக்கல்லூரி வெறும் 300 மாணவியருடன் தொடங்கப்பட்டது. தற்போது அங்கு மூவாயிரம் மாணவிகள் வரை படித்து வருகிறார்கள். BA, B.Com, B.Sc உள்ளிட்ட பல்வேறு துறைகள் 12 இளங்களை பட்டப்படிப்பு, MA, M.Com, M. Sc உள்ளிட்ட துறைகளில் முதுகலை பட்டப்படிப்பும் தற்போது வரை கற்பிக்கப்பட்டு வருகிறது.


இதை தவிர தமிழ், வேதியல், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு உயர்ஆய்வு மையங்களும் உள்ளன. இதில் பயிலும் மாணவியர்கள் 70% பேர் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பயின்று வருகிறார்கள். அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்றார் போல் பேராசிரியர்கள் அங்கு நியமிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். குறிப்பாக இந்த கல்லூரியில் தற்போது வரை 10 நிரந்தர பேராசிரியர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.


தமிழ், இயற்பியல் துறை பேராசிரியர்கள் தற்போது வரை நியமிக்கப்படவில்லை. பி.காம், பிகாம் (கூட்டுறவு மேலாண்மை), பொறியியல் துறை, வரலாற்று துறை, புள்ளியல் துறை உள்ளிட்ட பிரிவுகளுக்கு இதுவரை நிரந்தர பேராசிரியர்கள் பதவி நிரப்பப்படவில்லை. நான்கு துறைக்கு மேல் உயர்படிப்புக்கான ஆய்வு மையம் இருந்தும் அங்கு நெறியாளர்கள் இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மாணவியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இங்கு பெரும் கௌரவ விரிவுரையாளர்களை வைத்து தான் பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News