ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா: கவர்னர் விளக்கம் கேட்டு கடிதம்!
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்த சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம் எழுதி இருக்கிறார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிக்கும் சட்ட மசோதா தொடர்பான சில கேள்விகளை தமிழக அரசுக்கு கவர்னர் கேட்டு, கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இணையதள சூதாட்டத்தை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைத்து விசாரணை செய்து தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியது. இந்தக் குழு ஜூன் மாதம் தனது அறிக்கையை வழங்கியது.
அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவை பார்வைக்கு முன்வைக்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் மீது ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பள்ளி கல்வித்துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கு எடுப்பு மற்றும் பொதுமக்களிடம் ஈ-மெயில் வாயிலாக பெறப்பட கருத்துக்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு 20222, ஆகஸ்ட் 21ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பிறகு அதனை செம்மைப்படுத்த முடிவு செய்து அவசர சட்டம் தயார் செய்யப்பட்டது. அவசர சட்டத்திற்கு செப்டம்பர் 26ம் தேதி ஒப்புதல் கிடைத்தது. பின்னர் கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய மற்றும் ஒழுங்குமுறைப் படுத்தும் அவசர சட்டத்திற்கு அக்டோபர் ஒன்றாம் தேதி கவர்னர் ஒப்புதல் அளித்தார். அவசர சட்டத்திற்கு மாற்றாக, நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிரூபிக்கப்பட்டது. கவர்னர் ஒப்புதலுக்காக 28ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்நிலையில் அதில் சில விளக்கங்களை கேட்டு கவர்னர் தமிழக அரசுக்கு கடிதம் இருக்கிறார். மேலும் தமிழக அரசு தரும் பதிலைக் கொண்டு நிரந்தரச் சட்டம் அமைக்க முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar News